பள்ளிக்கல்வித்துறை தடுமாறுகிறதா....?

 பள்ளிக்கல்வித்துறை தடுமாறுகிறதா....?

குரோனா தொடங்கியதில் இருந்தே பள்ளிக்கல்வித்துறை நிறைய தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது.

அரசு பொதுத்தேர்வுகள் நடத்துவதில் இருந்து பள்ளிகள் விடுமுறை விடுவது வரை எத்தனை தடுமாற்றங்கள்....

அரசு பொதுத்தேர்வுகள் இருக்கிறது என்கிறார்கள். சில நேரங்களில் இல்லை என்று சொல்கிறார்கள். திருப்புதல் தேர்வுகள் மட்டும் தான் என்கிறார்கள் அதில்கூட ஆயிரத்தெட்டு குளறுபடிகள்..

நடத்தாத அரையாண்டு தேர்வுக்கு விடுமுறை விடுகிறார்கள் ஒன்னரை வரியில் போடப்பட்ட அந்த ஆணையில் ஆயிரத்தெட்டு தவறுகள். 

2, 3 ஆணை போட்டு கடைசியாக ஒரு ஆணையைவெளியிடுகிறார்கள். இறுதியாக முடிவு செய்து ஒரு நல்ல ஆணையை வெளியிடுவதற்கு முன்பாகவே தவறான ஆணைகளை சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார்கள் இது திறமையான ஆணையாளர் நந்தகுமாரின்  செயல்பாடுகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

இத்துடன் இந்த ஆட்டம் நின்றுவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கடந்த வாரத்தில் வெளியிட்ட ஒரு ஆணை அனைவரையும் அதிர வைத்துள்ளது.

வரும் 26 பிப்ரவரி 2022 ஆம் தேதி நோ புக் டே கொண்டாடப்படும் என்பதுதான் அந்த ஆணை. 

 இருபத்தி ஆறாம் தேதி கொண்டாட வேண்டிய No Book Day கொண்டாடப்படுவதில்லை என்கிற ஆணையை பள்ளிக்கல்வித்துறை இப்போது வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஏன் இப்படி தடுமாறுகிறது என்று தெரியவில்லை. இனியாவது தடுமாற்றம் இல்லாமல் ஒழுங்காக செயல்பட்டால்தான் தமிழக மாணவர்களின் நலனை பாதுகாக்க முடியும். நல்ல கல்வியை வழங்க முடியும் பள்ளிக்கல்வி ஆணையாளர் நந்தகுமார் கவனிப்பாரா...?