இல்லம் தேடி கல்வியால் வராத Corona பள்ளிக்கு வந்தால் வந்துவிடுமா.....? முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சிந்திக்கவேண்டும்...!!

இல்லம் தேடி கல்வியால் வராத Corona  பள்ளிக்கு வந்தால் வந்துவிடுமா.....? முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சிந்திக்கவேண்டும்...!!


இல்லம் தேடி கல்வி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு இல்லம் தேடி கல்விமுறை நடத்திட வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது  இல்லம் தேடி கல்வி முறையிலும் மழலைச் செல்வங்கள் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் தான் படிக்கப் போகிறார்கள் அவர்களுக்கு பல்வேறு வகையான வழிபாட்டு முறைகளை அரசு அறிவித்திருக்கிறது அரசு வழிகாட்டு முறைகளின்படி நடத்தப்படுகிற இல்லம் தேடி கல்விமுறை கல்வி என்பது கொரோனா விழிப்புணர்வுடன்  பாதுகாப்பு முறைகளால் குழந்தைகளுக்கு கல்வி நடத்தப்படும் என்ற உத்தரவாதம் அரசு தருகிறது முறையாக அனுமதி பெற்று முறையாக கட்டிடங்கள் கட்டி அரசு முறைப்படி விதிகளின் படியும் பள்ளிகளில் படிக்க வருகிற ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கிற குழந்தைகளுக்கு மட்டும் தான் கொரோணாவரும் என்று அரசாங்கம் கருதுவது எந்த வகையில் நியாயம் முறையான கட்டிடங்கள் இல்லாமல் முறையான ஆசிரியர்கள் இல்லாமல் நடத்தப்படும் இல்லம் தேடி கல்வி மட்டும் கொரோணா பாதுகாப்பாக இருக்கும் என்றாள் அரசு விதிகளின்படி அனைத்து  சான்றிதழ்களும் பெற்று முறையான அனுமதியோடு நடத்தப்படுகிற பள்ளிகளில் மட்டும் கொராண வரும் என்று சொல்லி குழந்தைகளின் கல்வியை நிறுத்தி இருக்கிற அரசு அரசு அதிகாரிகள் ஆசிரிய பெருந்தகைகள் முறைப்படி சிந்திக்க வேண்டும் குழந்தைகளை பாதிக்கிற செயல்களில் அரசாங்கம் இருக்கிறதோ என்று அச்சப்படுகிற சூழல் உருவாகிறது தயவுசெய்து அரசு இதை கவனித்து இல்லம் தேடி கல்வி மட்டும் நடத்தப்படும் என்று சொன்னால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளையும் திறந்து பாடம் நடத்தலாமே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் அரசாங்கம் நல்ல பதிலை தர வேண்டும்