ராமநாதபுரம் மாவட்ட போதகர் சங்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

ராமநாதபுரம் மாவட்ட போதகர் சங்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ்  விழா

ராமநாதபுரம் டிச- 18

ராமநாதபுரம் மாவட்ட போதகர் சங்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ்  விழா. இவ்விழாவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வருகை தந்த அனைவருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதில் தூய்மைப் பணியாளர்கள்,

கண்பார்வையற்றோர்,விதவைகள், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் ஆகிய நான்கு வித நிலையில் உள்ளோரை தேர்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிழும் இருந்து 1512 பேர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டினை சங்கத்தின் தலைவர் பாஸ்டர் ராஜ்குமார், செயலாளர் பாஸ்டர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்டர் ஜெபக்குமார்,  ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் இருந்து அனைத்து திருச்சபைகளின்

போதகர்கள் மற்றும் திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக வருகை தந்தவர்களுக்கு அன்பின் விருந்து வழங்கப்பட்டது. இதில் திமுக முக்கியபிரமுகரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் அண்ணனுமாகிய  காதர்பாட்சா மூவேந்திரன். மாநில திமுக செயற்குழு உறுப்பினர்  குணசேகரன், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பிரபாகரன், ராமநாதபுரம் (வடக்கு) நகர செயலாளர் கார்மேகம், (தெற்கு) நகர செயலாளர் டி. ஆர். பிரவீன் தங்கம், அறம் விழுதுகள் அறக்கட்டளை முகம்மது சலாஹுதீன் அவர்கள்,குருவாடி அன்சாரி,மாநில முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணியின் இணை அமைப்பாளர் அப்துல் ஜபார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு