சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மண்டல அளவிலான கருத்தரங்கம்.

 சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மண்டல அளவிலான கருத்தரங்கம்.

ராமநாதபுரம் டிச- 18

தமிழக முதலமைச்சர் அவர்களின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ள படியும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படியும் 1.4.2003 முதல் தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்துள்ள 6 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் எதிர் கால வாழ்வை கேள்விக்குறியாக்கும் சிபிஎஸ் திட்டத்தை இரத்து செய்து மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தை உறுதிப்படுத்தும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்திடவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று பணிக்கொடை வழங்கிடவும் மாநில மைய முடிவின்படி மண்டல அளவிலான கருத்தரங்கம் இன்று காலை வளர்ச்சித் துறை மஹாலில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்    எம்.முனீஸ் பிரபு வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தர் வாழ்த்துரை வழங்கினார். ராஜ ராஜேஸ்வரன், சங்கர சுப்பிரமணியன் மற்றும் கணேச மூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்கினார். சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க ஜெய கார்த்தி நன்றியுரை கூற கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு