மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்

 மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் டிச- 17

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாகிகளும் மகளிர் அணி நிர்வாகிகளும்  திரளாக கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில்முன்னாள் அமைச்சர் மருத்துவர்.எஸ். மணிகண்டன் மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆர்.ஜி. ரத்தினம்,பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகரன்,  ஒன்றிய கழக செயலாளர்கள் RG.மருதுபாண்டியன், அசோக், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் கவிதா சசிகுமார்,மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சரவணன்,


மாவட்ட பாசறை செயலாளர் பொறியாளர் பால்பாண்டி, தலைமைக் கழக பேச்சாளரும் பரமக்குடி நகர செயலாளர் எம்.கே. ஜமால், உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர் நகர்ச் செயலாளர் அங்குச்சாமி நன்றியுரை கூற கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு