மாந்த நேய இயக்கத்தின் சார்பில் முத்தமிழ்த் திருவிழா

மாந்த நேய இயக்கத்தின் சார்பில் முத்தமிழ்த் திருவிழா

மாந்த நேய இயக்கத்தின் சார்பில், கடந்த நவம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, குயின்ஸ் சாலையில், உள்ள வேளாண்மை தொழில் நுட்ப நிறூவன அரங்கில், இயல், இசை, நாடகம் உள்ளிட்ட முத்தமிழ்த் திருவிழா, அழைப்பிதழில்  குறிப்பிட்டபடி சரியாக மாலை 03.57 மணிக்கு தொடங்கியது.

பல தமிழ்ச் சான்றோர்கள் முன்னிலையில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, தமிழ்பொழி வாழ்த்துடன் தொடங்கியது. தொழிலதிபர் வெற்றியாளான், எம்.ஜி.ஆர்.ரவி, ,எம்.ஜி.ஆர்.மணி ஆகியோர் குத்து விள்க்கேற்ற, ,அரங்கில் முழுமையாக  நிறைந்திருந்த தமிழ் பற்றாளர்களை பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் து.சண்முகவேலன் வரவேற்றர்.

மறைத்த தமிழ்சங்க பொறுப்பாளர் விஜயகுமார், பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் மறைவுக்கு  நிகழ்ச்சி துவக்கத்தில் அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருநாடக மாநிலத் திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றத் தலைவர் தேனிரா. உதயகுமாரின் கட்டுப்பாட்டடான நெறியாள்கையில்  நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில், தேசிய விமான ஆய்வுக்கூட அறிவியலாளர் முனைவர்.ஆ.உதயகுமார், , புலவர் மு.சரவணன், பத்திரிக்கை துறையை சார்ந்த முத்துமணி நன்னன் இரா. வினோத், கருநாடக மாநிலத் திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்ற பொதுச் செயலாளர் தளபதி அ.மணி, தொழிலதிபர் பி.எம்.சுந்தரம்  ஆகியோர் “கொள்கையில் உறுதி” எனும் தலைப்பில்  கருநாடகத்தில் இன்றைய தமிழரின் நிலை, ஆற்ற வேண்டிய பணி போன்றவற்றை எடுத்துரைத்தனர்.

அரிமா பத்மனாபன் சிம்போனி இசைக் குழுவின் ஸ்டெல்லா, ஸ்ரீநிவாசன், மகேஷ், சந்திரசேகர், ஓசூர் இளைய நிலா இசைக்குழுவைவின் தில்லை குமார், சரண்யா, விஜய் சாம்சன், பெங்களூருத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கு பெற்ற சிறப்பான இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது 

பாவலர்கள் மதலை மணி, முத்துசாமி, ராஜா முகமது, அன்புச் செல்வி, வீணாதேவி ஆகியோர் தமிழரின் ஒற்றுமையை வலியிருத்தி “கூடிவாழ்ந்தால் கோடி நன்மை” எனும் தலைப்பில் சிறப்பான கவிதைகளை  படைத்தனர். 

பாரம்பரிய நடனமும், மேற்கத்திய நடனமும் இனைந்த ஒரு அற்புத நடன கலவையை கொடுத்த சென்னை மாநகரை சேர்ந்த பள்ளி மாணவியர் டார்த்தி, ப்ரித்தி ஆகியோர் பங்கு பெற்ற  நடன நிகழ்ச்சி எல்லோராலும் பாரட்டபட்டது. திருவாருரிலிருந்து வந்திருந்த பூங்காவனம் நடனமாடிய சிறுமிகளையும் அவரது குடும்பத்தினைரையும் பாராட்டி பேசினார்.

பள்ளி இறுதி வகுப்பில் முதல் மாணவராக வாகை சூடிய ஓசூர் ஆர்.வி,மாணவர் உயர் நிலை பள்ளியின் ப.ஜெகதீஸ் மற்றும் அவரது பெற்றோர்  நிகழ்ச்சியில்  சிறப்பிக்கப்பட்டனர்.

சென்னை நடிகர் சங்கத்தில் மூன்று முறை சிறந்த நகைச்சுவை நடிகர் விருது பெற்ற கு.செயக்கிருட்டிணன், மற்றும் அவரது குழுவினர் என்.ரவி, எம்.பாஸ்கர், கே.டேவிட், லலிதாஸ்ரீ ஆகியோர்வழங்கிய “சிரிப்போம், சிந்திப்போம்” என்கிற நாடகம்  தமிழர்களின் ஒருங்கிணைப்பை வலியிருத்தி, பார்வையாளர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

தமிழ் பற்றாளர்கள் இராதை மணாளன், புலவர் கி.சு.இளங்கோவன், தமிழ்ச் செ ல்வி, , பெங்களூருத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் கோபி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

மேடையில் பங்கு பெற்ற அனைவருக்கும், பொன்னாடை  அணிவித்து நினைவு சான்றிதழ் வழங்கி  சிறப்பிக்கபட்ட இந்த நிகழ்ச்சியில் சரியான நேரத்தில் தேநீர் இடைவெளி கொடுக்கபட்டு, முடிவில் இரவு உணவும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. 

பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் து.சண்முகவேலன், கருநாடக மாநிலத் திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றத் தலைவர் தேனிரா. உதயகுமார், அரிமா பத்மனாபன் ஆகியோர் இனைந்து ஏரற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியின் முடிவில் பாவலர் ஆர்க்காடு ராஜாமுகமது நன்றி கூறினார்.

மாந்த நேய இயக்கத்தின் சார்பாக

தேனிரா.உதயகுமார்