மாரியம்மன் திருக்கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

மாரியம்மன் திருக்கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

டிச-13

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி திருமதி ஆர்.பி.கே. ராஜேஸ்வரி நாச்சியார் அவர்களுக்கு பாத்தியமானதும் அவர்களின் நிர்வாகத்திற்கு உள்ளாதுமான

ராமநாதபுரம் மாநகரில் அமைந்துள்ள அருள் தரும் மாரியம்மன் திருக்கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  13.12.21.தேதி மிக விமரிசையாக நடைபெற்றது. அதனையொட்டி முதல் கால யாகசாலை பூஜை 10.12.20 அன்று காலை 08.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்யஸ்ரீ மஹாகணபதி ஹோமம், நவக்ரஹோமம், தனலக்ஷ்மி பூஜை, சரஸ்வதி பூஜையுடன் 11.12.202 அன்று காலை 10.30 மணிக்கு

வாஸ்து சாந்தி,மிருத்சங்கிர கணம், அங்குரார்ப்பணம், பிரசன்னா அபிஷேகம் நடைபெற்று மாலை 5 மணிக்கு ரக்ஷா பந்தனம்,கும்ப அலங்காரம், கலாரக்ஷணம்,யாத்ரா தானம்,இரவு 9 மணி அளவில் முதல் கால யாகசாலை பூஜை ஆரம்பமாகியது முதலில் பூர்ணாகுதி தீபாராதனை 12.12.21 காலை 8.30.மணி முதல் 11 மணிக்குள் விசேஷ சந்தியாவந்தனம், இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், பூர்ணாஹுதி தீபாராதனை,மாலை 4.30மணிக்கு விசேஷ சந்தியாவந்தனம், மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம். பூர்ணாஹூதி தீபாராதனை 13.12 .21 அதிகாலை 3:30 மணி அளவில் நான்காம் கால யாகசாலை பூஜை,கோபூஜை சுவாசினி பூஜை, ஸ்பரிசாகுதி, தத்வார்ச்சனை, மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானதுடன் கடம் புறப்பட்டது. காலை 6:30 மணி முதல் 7.29 மணிக்குள்  மகா கும்பாபிஷேகம் மிக மிக விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தவுடன் மகாதீபாராதனை அருட் பிரசாதம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டினை திவான் மற்றும் நிர்வாகச் செயலர் சமஸ்தானம் தேவஸ்தானம் ராமநாதபுரம் திரு.வி கே.பழனிவேல் பாண்டியன் மற்றும் சமஸ்தானம் தேவஸ்தானம் செயல் அலுவலர் எம் ராமு உள்ளிட்டோர் செய்திருந்தனர் சர்வ சாதகத்தை சிவ ஸ்ரீ சந்திரசேகர குருக்கள் ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் ஆலய அர்ச்சகர் திருவாடானை செய்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டினை திவான்  திரு. பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார். இந்த பூஜையில் பக்தர்கள், ஆன்மீக பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.         சர்வ சாதகத்தை சிவஸ்ரீ சந்திரசேகர குருக்கள் ஆதிரத்தினேஸ்வரர் ஆலயமிராசு  அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் திருவாடானை, செய்திருந்தார். கும்பாபிஷேகம் முடிந்த உடன் கோயிலைச் சுற்றி 4 இடங்களில் ராமநாதபுரம் மீன்கடை அருகிலுள்ள மிக்சர்கடை S.ராமசாமிநாடார் குடும்பத்தினர் சார்பில் வருகை தந்த பக்தர்களுக்கு 1000 பேர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இதில்ராமநாதபுரம் (தெற்கு) தி.மு.கசெயலாளர் பிரவீன் தங்கம், அ.இ .அ.தி.மு.க சைனா பாஸ்கரன், மருத்துவர் பரணிக்குமார் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்