சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மாபெரும் சட்ட உதவி முகாம்
ராமநாதபுரம் நவ- 13
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாபெரும் சட்ட உதவி முகாம் இன்று 13-12-2021 நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் மாவட்ட நீதிபதி திரு.சண்முகசுந்தரம், கூடுதல் மாவட்ட நீதிபதி.திரு. சீனிவாசன்,முதன்மை குற்றவியல் நடுவர் திருமதி.கவிதா,சார்பு. நீதிபதி.திரு.கதிரவன்,மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் திரு. ரவிச்சந்திரன் ராம வன்னி,மாவட்ட அரசு வழக்கறிஞர் திரு.முனியசாமி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஏற்பாட்டினை மிக சிறப்பாக செய்திருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு