பள்ளி மாணவர்களை வரவேற்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்

பள்ளி மாணவர்களை வரவேற்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்


செ-01 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று காலை சரியாக 8.30. மணி அளவில் சிறப்பாக திறக்கப்பட்டது. பள்ளியின் வாசலில்  ஊராட்சி ஒன்றிய தலைவர்  எஸ். புல்லாணி அவர்கள் தலைமையில்  திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரமாலா, அவர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கலாராணி அவர்கள் மற்றும் தலைமையாசிரியர் வன்னி முத்து, திருப்புல்லாணி காங்கிரஸ் வட்டார தலைவர் சேதுபாண்டி, அவர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களை வரவேற்றார்கள்.  கொரோனா  காலமாக இருப்பதால் குழந்தைகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு டெம்பரேச்சர் பார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.இந்த பள்ளியில் கட்டிட வசதி இல்லாத காரணத்தால் சுழற்சி முறையில் பள்ளி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு