அரசனட்டி பகுதியில், 8 தெருக்களில்,ரூ.15 லட்சம் மதிப்பில் 232 கேமராக்கள் பொருத்தப்படும் நிகழ்ச்சி
ஓசூர்,நவ.29-
ஓசூர் மாநகராட்சி வார்டு எண்.16-க்குட்பட்ட அரசனட்டி பகுதியில், 8 தெருக்களில்,ரூ.15 லட்சம் மதிப்பில் 232 கேமராக்கள் பொருத்தப்படும் டி.வி கேமரா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அரசனட்டி விநாயகர் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, ஓசூர் மாநகர தி.மு.க.பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சத்யா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட கலை இலக்கிய, பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கண்ணன் வரவேற்றார். இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு சிசிடிவி.கேமராக்களை வழங்கி விழாவில் பேசினார். மேலும் இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர் மாதேஸ்வரன் உள் பட பலர் பேசினார்கள். மேலும் விழாவில், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், மாநகர பொருளாளர் சென்னீரப்பா மற்றும் கட்சியினர், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்