திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் 4400 மரக்கன்றுகள் நடும் விழா

திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் 4400 மரக்கன்றுகள் நடும் விழா

ராமநாதபுரம் நவ-25

ராமநாதபுரம் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் 4400 மரக்கன்றுகள் நடும் விழா.ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் M.L.A.அவர்களின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு 4400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தலைமை ஏற்று ராமநாதபுரம்         M.L.A.வும்,தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தார்.

இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் உள்ள, மருத்துவக் கல்லூரி கட்டிடம் அருகில் சிறப்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.பூமித் தாய் மடியில் மரக்குழந்தைகள் தவழும் நிகழ்வு. என்ற தலைப்பில்4400 மரக்கன்றுகள் நடும் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பிரம்மாண்ட ஏற்பாட்டினை   தி.மு.க.சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர்,அறம் விழுதுகள், அ.முகமது சலாவுதீன் மிகச் சிறப்பாக  செய்திருந்தார். அடாது மழை பெய்தாலும் விடாது தனது முயற்சியில் ஈடுபட்டு சிறப்பான முறையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர திமுக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள், ஊராட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், மற்றும் ஜாஸ் கேட்டரிங் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு