தேனி மாவட்டம்பெரியகுளம் கீழவடகரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தேனி மாவட்டம்பெரியகுளம் கீழவடகரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்


அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற வேண்டுமென அரசு அறிவித்துள்ள வேலையில்,தேனி மாவட்டம்பெரியகுளம் கீழவடகரைதலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது..கூட்டத்தில் கீழவளவு ஊராட்சி மக்களுக்கு சோத்துப்பாறை குடிநீர் கொண்டு வருவது எனவும் ஊராட்சி முழுவதும் பாதாளச்சாக்கடைத் திட்டம்,புதிய மின் மாற்றி அமைத்தல் அடிப்படை வசதிகளை செய்து தர, முழுமையான  கொரோனா

தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அகிலன்,அனீஸ் பாத்திமா,ஊராட்சி மன்றதுணைத் தலைவர் ராஜசேகர்,திமுக நிர்வாகிகள் செல்வராஜ், வக்கீல்காமராஜ்,ஊராட்சி செயலர் ஜெயபாண்டி,தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு நிர்வாகி சித்ராதேவி மற்றும்ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோன்று சருத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திற்கு தலைவர் சாந்தி கண்ணையா தலைமை தாங்கினார்.கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த குடிநீர் வசதிகள் சாலை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத்தலைவர் ஆண்டவர் திமுக இலக்கிய அணி பொறுப்பாளர் கண்ணையன்,ஊராட்சி செயலாளர் செல்லப்பாண்டியன்,அரசு அலுவலர்கள் சுகாதாரத்துறையினர் பொதுமக்கள்

உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட செய்திக்காக வெள்ளைச்சாமி