பனை விதை நடும் உலக சாதனை துவக்கநிகழ்ச்சி

பனை விதை நடும் உலக சாதனை துவக்கநிகழ்ச்சி


12 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் அதிகமான பனை விதை நடும் உலக சாதனை என்ற சாதனை துவக்கநிகழ்ச்சி  ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி கிராமத்தில்  இன்று நடைபெற்றது .

மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு ஏ .எம் காமாட்சி கணேசன் ,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கே.ஜே பிரவீன் குமார், ஆகியோர் தலைமை ஏற்றனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கபாண்டியன், பாண்டி, ஊராட்சி, மன்ற தலைவர் கலாநிதி கோவிந்தராஜன், ஊராட்சி செயலாளர் ரமா பிரியா துரை, திருச்சி கிராமாலயா தன்னார்வ தொண்டுநிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் A. பாப்பு, மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


ராதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு