அனைத்து கலைஞர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்: நாதஸ்வர கலைஞர்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நாதஸ்வர கலைஞர்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கொரனா தாக்கம் காரணமாக கோவில் விழா திருமணம் மற்றும் அனைத்து வகையான விசேஷங்களும் தடைபட்டதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அனைத்து கலைஞர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் இதேபோல கலைஞர்களுக்கு இசைக்கருவி மூத்த கலைஞர்களுக்கு பென்சன் இலவச பஸ் பாஸ் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.👆