மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிவழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிவழங்கினார்.

ஈரோடு: 27.10.21 

        வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

            ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கொரோனாவால் தாய் தந்தை இறந்த 2 மாணவிகளுக்கு வைப்புநிதி தொகையிலிருந்து ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலையையும், கொரோனாவால் பெற்றோரை இழந்த 39 மாணவ-மாணவிகளுக்கு தலா 3 லட்சம் வைப்பு நிதிக்கான காசோலையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 23 பேருக்கு இருபத்தி மூன்று லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும் முதுகு தண்டு வடம் பாதிக்கபட்ட 60  பயனாளிகளுக்கு மருத்துவ  பொருட்களும், கருணை அடிப்படையில் ஒருவருக்குவருவாய்த் துறையின் சார்பில் பணி நியமன ஆணை என 1 கோடியே 72 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில்  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு  நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்பி கணேசமூர்த்தி ,ராஜ்யசபா எம்பி செல்வராஜ் ,கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார் ,எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், திருமகன் ஈ.வெ.ரா. ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி(பொது), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா தேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி,

 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகவடிவு ,ஊரக குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.👆