ஏன் இந்த அக்கப்போர்....? பள்ளிகளை திறப்பதில் எதற்கு இந்த வயிற்றெரிச்சல்...?
நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பிறகு முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக 1 – 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் கல்வி நிலை கேள்விக் குறியாக உள்ளது. ஒன்னரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கற்றலில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களை தவிர பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களும் கூறுகின்றனர்.
இந்த நிலையை சரி செய்ய மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. கல்வியாளர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவரிடமும் கருத்துக்கள் பெறப்பட்டு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஆராய்ந்து முதல்வர் முக ஸ்டாலின் 1 – 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் மக்கள் பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். இதனால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் பள்ளிகளும் திறப்பட்டால் ஒரு புறமும் மக்கள் கூட்டமும், மறுபுறம் மாணவர்கள் கூட்டமும் அதிகரிக்கும். இன்னும் தொற்று முழுமையாக குறையாத நிலையில் இவ்வாறு பொது இடங்களில் அதிகரிக்கும் கூட்டம் மீண்டும் தொற்று பரவும் வாய்ப்பை அதிகரிக்கும். அதனால் பண்டிகை முடிந்தவுடன் பள்ளிகளை நவம்பர் 8ம் தேதி திறக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக விரோதிகள் கோரிக்கை வைத்தனர்.
பள்ளிகளை திறப்பதில் அவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்றே தெரியவில்லை எங்கெங்கெல்லாம் சென்று ஒட்டாத குறள் பள்ளிகளில் வந்தால் மட்டும் ஒட்டி விடுமா..?
பள்ளிகள் திறப்பதில் இவர்கள் ஏன் இந்த அக்கப்போர் செய்கிறார்கள் அவர்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்று தெரியவில்லை.
ஊடகங்களும் இது ஒரு ஒட்டி செய்தியாக்கி போட்டு விடுவதால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படுமா திறக்கப்படாத என்கிற கேள்வி அச்சம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது இப்படியே தள்ளிக்கொண்டே போய்க் கொண்டிருந்தால் எப்போது தான் பள்ளிகள் திறக்கும் என்கிற கேள்வி கண்டிப்பாக எழுந்துவிடும் அதற்குள் இந்த கல்வியாண்டு முடிந்துவிடும் இப்போது மாணவர்கள் அடி முட்டாள்களாக கடும் குற்றவாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் .
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்
நவம்பர் 1ஆம் தேதியே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயமில்லை-
1 முதல் 8 வகுப்புகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயமில்லை.
தீபாவளி திருநாளுக்குப் பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் அதன் பிறகு வரலாம்.
மாணவர்கள் காலை எழுவது, உணவு அருந்துவது, பள்ளிக்கு வருவது போன்ற ஒழுக்க நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன-.
தீபாவளிக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று சொன்னவர்களுக்கு அமைச்சர் சொன்ன இந்த விளக்கம் சரியானது தான் என்று சொன்னாலும் அவரும் முதலமைச்சரும் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் தீவிரமாக செயல்பட்டு இருக்கலாம்.
ஜெயலலிதாவை போன்று துணிச்சலாக சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் பள்ளிக்கு வருபவர்களுக்கு தான் வேலை இல்லாவிட்டால் தூக்கி எறிவார்கள் என்று துணிச்சலாக சொல்லி இருந்தால் யாருமே இவ்வளவு பெரிய கோரிக்கை எல்லாம் வைக்க மாட்டார்கள்.
தீபாவளி ஆவது பொங்கல் ஆவது என்று அதையெல்லாம் விட்டுவிட்டு ஓடோடி வந்து இருப்பார்கள்.
இனியாவது சாட்டையை சுற்றுவார்களா...?