சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை

சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளதால் வெள்ள அபாய  எச்சரிக்கை

 தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளதால் தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை •சோத்துப்பாறை அணை இன்று 02.10.2021 மாலை  5.00 மணிக்கு தனது முழு  கொள்ளளவு மட்டத்துக்கு அருகே எட்டியுள்ளது• விரைவில் அணை நிரம்பி பெரியகுளம் மேல்மங்கலம் ஜெயமங்கலம் மற்றும் குள்ளப்புரம் கிராமங்கள் வழியாக கடந்து செல்லும்• இது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை ஆகும், 

மாலை 5:00 மணி நிலவரம்

 இன்றைய மட்டம் 121•28  அடி

முழு கொள்ளளவு 126•28 அடி 

நீர்வரத்து வினாடிக்கு 16 கன அடி .. 


 தேனி மாவட்ட செய்திக்காக

அ.வெள்ளைச்சாமி