அதிமுகவின் 50வது ஆண்டு பொன் விழா
ராமநாதபுரம் மாவட்டம் அ.இ. அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் அதிமுகவின் 50வது ஆண்டு பொன் விழா துவக்க நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அஇஅதிமுகவின் பிரம்மாண்ட 50ஆவது ஆண்டு பொன்விழா நகர் செயலாளர் அங்குச்சாமி தலைமையில் அரண்மனையில் நடந்தது. இந்தவிழாவில் அதிமுக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்பியுமான திரு.ஏ. அன்வர் ராஜா அவர்களும் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி அவர்களும் கலந்துகொண்டுசிறப்புரையாற்றினார்கள்.இதனையடுத்து பட்டிணம்காத்தான் ஊராட்சியில் பாரதி நகரில் நடந்த சிறப்பான பொன்விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் அவர்கள், ஜெயலலிதா அவர்கள் படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அவர்களும் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி அவர்களும் ராமநாதபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் அசோக் அவர்களும் மாவட்ட அம்மாபேரவை துணை செயலாளரும், மண்டபம் ஒன்றிய கவுன்சிலருமான மருதுபாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில்மாவட்ட. சிறுபான்மை பிரிவு செயலாளர் எம்.எஸ் தர்வீஸ், மற்றும் பட்டிணம்காத்தான் ஊராட்சியை சேர்ந்த அஇஅதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பட்டிணம் காத்தானில் பேருந்து நிறுத்தமிடத்தில் முன்னாள் முதல்வர்கள் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
இதனை அடுத்து மூத்த அ.இஅதிமுகவினருக்கு சால்வை அணிவித்து கெள ரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர்கள் MGR -ன் படத்திற்கும். ஜெயலலிதாவின் படத்திற்கும் மலர்மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு