3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!

3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!


தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது நேரடி வகுப்புகள் தொடங்கும் என கேள்விகள் எழுந்தது. 

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைஅதிகாரிகள், அமைச்சர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன் முடிவில் அறிக்கை ஒன்றை தயார் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய அறிக்கையோடு மருத்துவ வல்லுநர்கள், பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நேற்று முன் தினம் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் திறப்பு குறித்த அறிவிப்பும் வெளியானது.

ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகளுக்கு வரமுடியாத நிலையில் மாணவர்கள் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து பள்ளிகளுக்கு வருகை தரவுள்ளனர். இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதை சரிசெய்ய மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி 3, 5, 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 12ஆம் தேதி என்.ஏ.எஸ் திறனறி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. திறனறி தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கொரோனா பரவலால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பீட்டை கண்டறிய நாடு முழுவதும் திறனறித் தேர்வு நடத்த மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் 3, 5, 8, 10-ம் வகுப்புகளுக்கு மாநில அளவில் திறனறித் தேர்வு நவம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தவரை 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து வந்தது. தற்போது மத்திய அரசின்வழிகாட்டுதலின்படி கற்றல் குறைப்பாட்டை சரிசெய்ய இந்த திறனறித் தேர்வை நடத்தபோவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது பள்ளிகளில் திறக்காத போது தேர்வு என்பது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி எழுந்தாலும் ஆட்சியில் உள்ள போது ஒரு பேச்சு இல்லாதபோது ஒரு பேச்சு என்பது தமிழக மக்களை முட்டாள் ஆக்கும் செயலாகதோன்றுகிறது.

யாராக இருந்தாலும் பேச்சு பேச்சாக இருக்க வேண்டும். அன்னைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு பேசினால் இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.