அக்டோபர் 2-ம் தேதி முதல் ‘வீதி வகுப்பறை’ திட்டம்; பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்துகிறது

அக்டோபர் 2-ம் தேதி முதல் ‘வீதி வகுப்பறை’ திட்டம்; பள்ளிக்கல்வித்துறை  அறிமுகப்படுத்துகிறது


 பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பள்ளி கல்வித்துறை..*

*மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் வகையில் "வீதி வகுப்பறை" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.*

*தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து 9 முதல் 12 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.* 

*இந்நிலையில், மழலையர் மற்றும் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியைப் போக்க வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.* 

*‘வீதி வகுப்பறை’ என்ற பெயரில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்கிறது.*

*இதன்படி, 4 முதல் 5 வீடுகள் வரை உள்ள இடங்களுக்கு சென்று தினசரி 2 மணி நேரம் பாடம் நடத்தவும், கற்றல் குறைபாடை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.* 

*நவம்பர் 1-ம் தேதி முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘வீதி வகுப்பறை’ திட்டத்தை அக்டோபர் மாதம் முழுவதும் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.* 

*வரும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ‘வீதி வகுப்பறை’ திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.*