SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா ! மாநில பொதுச்செயலாளர் பங்கேற்பு!
SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா இன்று (28-09-2021) மாலை 4:00 மணியளவில் முதுகுளத்தூரில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் நூருல் அமீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். SDPI கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது மனசூர் , பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் சேக் தாவூது SDPI கட்சி விருதுநகர் மாவட்ட பொதுச்செயலாளர் அலி அகமது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அலுவலக திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுல்தான் அலாவுதீன் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.