BSW டி.வி.எஸ் கம்பெனி திறப்பு விழா
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் BSW டி.வி.எஸ் கம்பெனி திறப்பு விழா இன்று காலை மிக சிறப்பாக நடைபெற்றது. ஷோரூமை ஹாஜி A.அஜ்மல் மொகைதீன் அவர்கள், திறந்து வைத்தார். தானியங்கி சர்வீஸ் ஷாப்பை ராமநாதபுரம் அன்பு டி.வி.எஸ் அதிபர் எ. சார்லஸ் அவர்கள் திறந்து வைத்தார். உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தை எம். சேதுராஜன் அவர்கள், திறந்து வைத்தார். மோட்டார் சைக்கிள் முதல் விற்பனையை ஹாஜி செய்யது அக்பர் ஆலிம் துவக்கிவைத்தார். ஸ்கூட்டர் முதல் விற்பனை செய்தவர் டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி சேல்ஸ் கே. கிரண் குமார் அவர்கள், டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி சர்வீஸ் ஸ்டேஷனை சுடலை மணி அவர்கள், மொபட் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் BSW டி.வி.எஸ் உரிமையாளர் பஹ்ருல் அமீன் மற்றும் வாஹித் அமீன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றார்கள். திறப்பு விழா இனிதே நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு