ரேஷன் கார்டு, இருப்பிட சான்று இல்லாமல் ஆன்லைனிலேயே புதிதாக எல்பிஜி சிலிண்டரை பெறுவது எப்படி?*
*முகவரி சான்று இல்லாமல் சிலிண்டர் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை*
புதிதாக எல்பிஜி இணைப்பு எடுக்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இப்போது நீங்கள் இருப்பிட சான்று இல்லாமல் கூட சிலிண்டரைப் பெறலாம். இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்காக உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 1, 2016 அன்று தொடங்கி வைத்தார். இப்போது மத்திய அரசு தனது இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது, அதாவது உஜ்வாலா யோஜனா 2.0 சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் கட்டத்தின் கீழ், எல்பிஜி இணைப்புக்கு ரேஷன் கார்டு அல்லது பிற முகவரி சான்று வழங்க வேண்டிய அவசியமில்லை என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக முகவரி ஆதாரம் இல்லாமல் நீங்கள் புதிதாக எல்பிஜி சிலிண்டரை வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதி இப்போது மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்), புதிய எல்பிஜி இணைப்பிற்கு முகவரி தேவையில்லை என அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டரை இண்டேன் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது தங்கள் பகுதிக்கு அருகில் சென்று வாங்கலாம். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை, சிலிண்டருக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது.
நீங்கள் எரிவாயு சிலிண்டர் வேண்டாம் என பிற்காலத்தில் நினைத்தாலோ அல்லது நீங்கள் நகரத்தை விட்டு வெளியேறினால், இந்த சிலிண்டரை விற்பனை நிலையத்தில் திருப்பித் தரலாம். 5 வருடங்களில் திருப்பித் தந்தால், சிலிண்டரின் விலையில் 50% திருப்பித் தரப்படும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பித் தந்தால் 100 ரூபாய் திருப்பித் தரப்படும்.. இது தவிர, உங்கள் வீட்டில் இருந்தே எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்ய 8454955555 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். இது ஒவ்வொரு எரிவாயு சிலிண்டர் நிறுவனத்திற்கும் வேறுபடும்.
*முகவரி சான்று இல்லாமல் சிலிண்டர் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை :*
* முதலில் நீங்கள் pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் செல்ல வேண்டும்.
* இப்போது புதிய உஜ்வாலா 2.0 இணைப்பிற்கு விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
* பின்னர் ஹெச்பி, இண்டென் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களில் இருந்து உங்களுக்கு தேவையானதை விண்ணப்பித்து கொள்ளலாம்.
* சில முக்கிய தகவல்கள் உங்களிடம் கேட்கப்படும். கவனமாக நிரப்பிய பின் சமர்ப்பிக்கவும்.
* ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, எல்பிஜி இணைப்பு உங்கள் பெயரில் வழங்கப்படும். நீங்கள் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
*நிபந்தனைகள்.*
* இதில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
* ஒரே குடும்பத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் வேறு எல்பிஜி இணைப்பு இருக்கக் கூடாது.
* உஜ்வாலா இணைப்புக்கு eKYC இருப்பது கட்டாயமாகும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ரேஷன் கார்டு, வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு தேவைப்படும்.