தமிழ்நாட்டிலும் விநாயக சதூர்த்தி எழுச்சியுடன் நடைபெற வேண்டி, திருநெல்வேலியில், சிறப்பு சத்ரு சம்ஹார யாகம்...!

தமிழ்நாட்டிலும் விநாயக சதூர்த்தி எழுச்சியுடன் நடைபெற வேண்டி, திருநெல்வேலியில், சிறப்பு சத்ரு சம்ஹார யாகம்...!

புதுச்சேரி,கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை போலவே, தடைகள் நீங்கி, தமிழ்நாட்டிலும் விநாயக சதூர்த்தி எழுச்சியுடன் நடைபெற வேண்டி, திருநெல்வேலியில், சிறப்பு சத்ரு சம்ஹார யாகம்! இந்து முன்னணி சார்பில் நடைபெற்றது!  திருநெல்வேலி,செப்.6:- தமிழகம் உள்ளிட்ட, நாட்டின்  பல்வேறு மாநிலங்களிலும், "விநாயகர் சதூர்த்தி" விழா, ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதூர்த்தி விழாவினை, கொண்டாடும்படி, ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும், பொது இடங்களில், "விநாயகர்" சிலைகளை வைத்து, வழிபடுவதற்கும்,  அவற்றை "பிரதிஷ்டை" செய்து, ஊர்வலமாக சென்று ஆறுகள், குளங்கள், கடல்கள் போன்ற நீர்நிலைகளில், கரைப்பதற்கும், தமிழக அரசு "தற்காலிக தடை" விதித்துள்ளது."இந்த தடை  முற்றிலுமாக நீங்கிட வேண்டும்! புதுச்சேரி,கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், விநாயகர் வழிபாடுகளுக்கு, அந்தந்த மாநில அரசுகள் "அனுமதி" வழங்கி இருப்பதை போல, தமிழ்நாட்டிலும், மாநில அரசு அனுமதி வழங்கிட வேண்டும்!" ஆகிய  கோரிக்கைகளை முன்வைத்து, திருநெல்வேலியை அடுத்துள்ள, சுத்தமல்லி வ.உ.சி.நகரில் உள்ள,  "ஸ்ரீ ஜெய் மாருதி" ஞான தர்ம பீடத்தில், இன்று (செப்டம்பர்.6) காலை தொடங்கி, நண்பகல் வரையிலும்," சிறப்பு சத்ரு சம்ஹார யாகம்" நடைபெற்றது. மாவட்ட  "இந்து முன்னணி" சார்பில் நடைபெற்ற, இந்த சிறப்பு யாகத்துக்கு, இந்து முன்னணியின், மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், முன்னிலை வகித்தார். மாவட்ட  தலைவர் டி.சிவா,மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.பிரம்மநாயகம், மாவட்ட செயலாளர்கள் எம்.சுடலை, ஏ.செல்வராஜ்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜசெல்வம், எஸ்.சங்கர், தர்மபீட நிர்வாகி மணிகண்ட மகாதேவன் ஆகியோர்    உட்பட, பலர் கலந்து கொண்டனர்.