திருநெல்வேலியில், பாதுகாப்பு கோரி, காதல் ஜோடி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தஞ்சம்!

 திருநெல்வேலியில், பாதுகாப்பு கோரி, காதல் ஜோடி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தஞ்சம்! 

திருநெல்வேலி,செப்.7: திருநெல்வேலியை அடுத்துள்ள,  "சுத்தமல்லி" பகுதியை சேர்ந்த, ஜேசு அந்தோணி என்பவரின் மகன் ஜெனி (வயது.21). பாலிடெக்னிக்கில் படித்து முடித்துள்ள ஜெனி, தன்னுடைய ஊரின் அருகில் உள்ள,  "பழவூர்" கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் கவிதாவை, கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில், நேற்று (செப்டம்பர்.6) காலையில், திடீரென நண்பர்கள் துணையுடன், கவிதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையுடன், மணமக்கள் இருவரும்,கழுத்தில் மாலைகளுடன், பாளையங்கோட்டை சமாதானபுரம், "மிலிட்டரி லைன்" பகுதியில் உள்ள, "மாவட்ட காவல் கண்காணிப்பாளர்" அலுவலகத்துக்கு, நேரில் வந்து,"தாங்கள் இருவரும், வெவ்வேறு சாதி, வெவ்வேறு மதம் என்பதால், தங்களுக்கு தங்களுடைய பெற்றோர்களால், எந்த நேரத்திலும், ஏதாவது ஒரு வழியில், ஆபத்து ஏற்படலாம்! என்பதால், உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்!"என்று கேட்டு, "மனு" ஒன்றை கொடுத்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட, காவல்துறை அலுவலர்கள், அம்மனுவின் மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாக,  "உறுதி" அளித்ததை தொடர்ந்து,  "காதல்ஜோடி" அங்கிருந்து கிளம்பியது. இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம்  "பரபரப்பு" நிலவியது.