ராமநாதபுரம் தெற்கு நகர் செயலாளர் பிரவீன் குமார் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் தெற்கு நகர் செயலாளர் பிரவீன் குமார் வீட்டின் முன்பாக இன்று காலை மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையின் அறிவுறுத்தலின்படி இன்று காலை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும் விவசாயிகளை வஞ்சிக்கும் செயலை கைவிடவும்,கேஸ் விலை உயர்வை ரத்து செய்யவும்,
உள்ளிட்ட கோசங்களை கண்டனங்களையும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே எனும் கோஷங்கள் எழுப்பப் பட்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் பிரவீன்,6வது வார்டு செயலாளர் தினகர், ராமநாதபுரம் நகர் மீனவர் அணி பொறுப்பாளர் அசோக்,மற்றும் அரவரசன் எஸ்.பி. கண்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர், N.A. ஜெரினா பானு