டெல்லியில் பெண் காவலர் சபியாவை கொலை செய்தவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

டெல்லியில் பெண் காவலர் சபியாவை கொலை செய்தவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரம் செப்-16

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் டெல்லியில் காவல்துறையில் பணியாற்றிய சபியா என்ற பெண் காவலரை கொடூரமான முறையில் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் சந்தைத் திடலில் மாவட்ட தலைவர் ஹாஜிவருசை முகமது அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் முகமது பைசல் மாவட்ட பொருளாளர் சபீக்குர்ரஹ்மான், ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .கண்டன சிறப்புரையை மாநில இ.யூ.மு.லீக் பொருளாளர் ஹாஜி  M.S.A. ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் நகர, பிரைமரி நிர்வாகிகள் திறளாக கலந்துகொண்டனர்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு