பெட்ரோலின் விலையை எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள்தெரியுமா....?

பெட்ரோலின் விலையை எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள்தெரியுமா....?

பெட்ரோல் விலையை எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள் என்பது குறித்து காண்போம்.

கச்சா எண்ணெயிலிருந்து தான் பெட்ரோல், உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கச்சா எண்ணெய், அரபு நாடுகளில் எளிதாக பூமியில் கிடைக்கக்கூடியது. அதனை சுத்திகரித்த பின்பே பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவை கிடைக்கிறது. கச்சா எண்ணையை பீப்பாயில் அளவிடுவார்கள்.

ஒரு பீப்பாய் என்பது 159 லிட்டர். இதன் விலை அமெரிக்கன் டாலர்களில் மதிப்பிடப்படுகிறது. ஒரு பீப்பாயின் விலை 62.84 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 4559 ரூபாய். ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யின் விலை ரூ.28.67 ஆகும். ஆனால் இந்த கச்சா எண்ணையை அப்படியே வண்டியில் ஊற்றி பயன்படுத்த முடியாது.

எனவே, ஒரு லிட்டர் கச்சா எண்ணெயை பெட்ரோலாக சுத்திகரிக்க 3.84 ரூபாய் ஆகிறது. அதன் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரிக்க, கச்சா எண்ணெய் விலை மற்றும் சுத்திகரிப்பு விலை சேர்த்து (28.67+3.84= 32.51) 32 ரூபாய் ஆகிறது.

இதில், மத்திய அரசின் வரி 32.98 ரூபாய். எனவே, 32.51+32.98=65.49 ரூபாய் ஆகிறது. அதன்பின்பு, பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் 3.67 ரூபாய். எனவே, 65.49+3.67=69.16 ரூபாய். இதில் மாநில அரசின் வரி 15%+13.02/லி = 15%+69.16=10.374+13.02=23.39 ரூபாய்.

எனவே, மொத்தமாக 69.16+23.39= 92.55 ரூபாய்(தோராயமாக) ஆகிறது.

இதில், கச்சா எண்ணையின் விலை, டீலர்களின் கமிஷன், சுத்திகரிப்பின் செலவு போன்றவை மாறுபடும்போது ஒவ்வொரு நாளும் பெட்ரோலின் விலை கூடவும், குறையவும் செய்கிறது.