பள்ளி நிர்வாகிகளே சிந்தியுங்கள்...! நமது இந்த நிலைக்கு யார் காரணம் யோசியுங்கள்...!! இதற்கு தீர்வுதான் எப்போது....?

 பள்ளி நிர்வாகிகளே சிந்தியுங்கள்...! நமது இந்த நிலைக்கு யார் காரணம் யோசியுங்கள்...!! இதற்கு தீர்வுதான் எப்போது....?


 தமிழக அரசு இந்த ஆண்டு ப்ரீ. கே.ஜி., எல்.கே.ஜி.,  யூ.கே. ஜி. வகுப்புகளை திறக்காது என்று எண்ணுகிறோம். எனவே ப்ரீ கேஜி எல்கேஜி யுகேஜி பிளேஸ்கூல் நடத்துகிறவர்கள் தயவுசெய்து வாடகை கட்டிடத்தில் நடத்திக் கொண்டிருந்தாள் உடனடியாக  இந்த ஆண்டு முழுக்க வாடகை கொடுத்து ஏமாற வேண்டாம்.

 பல  நர்சரி பிரைமரி  பிளே ஸ்கூல் பள்ளி நிர்வாகிகள் வறுமையில் வாடி வதங்கி வருவதை கண்கூடாக பார்க்க மிகவும் கஷ்டமாக உள்ளது.

 ஆயிரக்கணக்கான பிளே ஸ்கூல்ஸ்  நர்சரி பிரைமரி பள்ளிகள் மூடிவிட்டார்கள்.

 மேற்கண்ட பள்ளிகளில் பணி புரிந்த ஆசிரியர்கள் பள்ளிகள் திறப்பது கேள்விக்குறி என்பதால் கூலி வேலைக்கு சென்று விட்டார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே... இல்லை என்று சொல்லவில்லை  இத்தனை காலம் கௌரவம் பார்த்து காத்திருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு இனிமேல் இப்படித்தான் வாழ்க்கை என்று வேறு வேலை பார்க்க தொடங்கி விட்டார்கள்.

இந்தக் கொடிய கொரோனா நோய்தொற்று காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது தனியார் பள்ளி நிர்வாகிகளும் ஆசிரியர்கள் தான் என்பதை இந்த அரசுகளும் மக்களும் ஏற்க மறுப்பது மிகுந்த வேதனையை தருகிறது....

 சென்ற ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் இப்படியே போய் விடும் தேர்வுகள் நடப்பதும் பள்ளிகள் திறப்பதும் இனியும் கேள்விக்குறியே.....

 20 ஆயிரம் கொரோனா நோய் தொற்றாளர்கள் இருந்தும்  அருகில் இருக்கும் கேரளாவில் வரும்  மாதம் ஒன்றாம் தேதிபள்ளிகள் திறப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

 தமிழகத்தில் அரசுப்பள்ளிகளை மட்டும் மறைமுகமாக திறந்துவிட்டு வருபவர்களை கொண்டு பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு பள்ளிகளில் முழுமையாக  இடமில்லை என்பதால்...மேசை நாற்காலிகள் இல்லை, கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை என்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் பள்ளிகளை திறக்க அஞ்சுகிறார்கள். பள்ளிகளை

திறந்தால் தனியார் பள்ளிகளில் இருந்து வந்து சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் நிலையை நேரில் ஓரிரு நாட்கள் பார்த்தால்  மீண்டும் தனியார் பள்ளிகளுக்கேபோய்விடுவார்கள் என்பதாலும் பள்ளிகளை திறக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.

இப்படியே போனால் ஓரிரு மாதங்கள் மட்டும் பள்ளிக்குப் போய் பணம் கட்டி ஏமாற வேண்டாம் என்று பெற்றோர்களும் எண்ணத் தொடங்கி விட்டார்கள்.

 பள்ளிகள் திறக்காமல் பாடம் நடத்த விடாமல் நியாயமன கல்விக் கட்டணம் நிர்ணயிக்காமல்

 அரசு தரவேண்டிய கல்வி கட்டண பாக்கியை தராமல்  பெற்றோர்கள் செலுத்தவேண்டிய  கல்விக் கட்டண பாக்கியை  செலுத்த வேண்டாம்.T.C இல்லாமல் அரசு பள்ளிகளில் சேர்ந்துகொள்..

7.5. சதவீதம் மருத்துவ மற்றும் உயர்கல்வி துறையில் இட ஒதுக்கீடு.. அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அரசு வேலை என எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி மறைமுகமாகவும் நேர்முகமாகவும் தமிழக அரசு தனியார் பள்ளிகளை அழிக்கும்  காரியத்தை கச்சிதமாக செய்து வருகிறது....

 மறுபுறம் தனியார் பள்ளிகள் திறக்க வில்லை என்றாலும் சொத்துவரி கட்டு

ESI கட்டு என ஒருபுறம் அனைத்து பள்ளிகளையும் நசுக்கி பள்ளிக்குசீல் வைத்து அவமானப்படுத்திவருகிறார்கள்.

 பள்ளிகள் திறப்பதற்கு முன்பே பள்ளி வாகனங்களை எப்.சி செய்ய வேண்டும். சிசிடிவி கேமரா  ஜிபிஆர்எஸ் பொருத்த வேண்டும்.. என்று  மீண்டும் உத்தரவு போட்டு விட்டார்கள்... என்ன செய்யப்போகிறோம்.

DTCP இல்லாமல் இனிமேல் அங்கீகாரம் இல்லை என்று மிரட்டல் ஒருபுறம்.

 பள்ளி நிர்வாகிகள் நாம் என்ன செய்யப்போகிறோம்?.

 தமிழகம் முழுதும் பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டியும் வட்டிக்கு வட்டியும்கட்டமுடியாமல் தத்தளித்து வருகிறார்கள்...

 கடன் கொடுத்த நிறுவனங்கள் பள்ளி வாகனங்களைசீல் வைக்கவும் வாகனங்களை  கைப்பற்றவும்தொடங்கிவிட்டார்கள்.

தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் ஆயிரம் பள்ளிகள் மூட தொடங்கிவிட்டார்கள்.

 இனியும் காலதாமதம் இன்றி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நமது உரிமைகளுக்காக மாபெரும் மக்கள் இயக்கமாக மாநில அரசு திரும்பிப் பார்க்கும் வண்ணம் நமது தனியார் பள்ளிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒருமித்த குரலாக மாபெரும் ஒரே சங்கமமாக சங்கமித்து தனியார் பள்ளிகள் சங்கத்தின் கூட்டமைப்பை உறுதிப்படுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

 இல்லை என்றால் நாம் நம் அடையாளத்தை இழந்து விடுவோம் என்பதை இனியாவது நாம் அனைவரும் உணர வேண்டும்... இல்லையேல் தனியார் பள்ளிகளை  ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

அன்புடன் உங்கள்

 கே. ஆர்.நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.