உளுந்தூர்பேட்டையில் அண்ணா சிலைக்கு எம்எல்ஏ மணிகண்ணன் மாலை அணிவித்து மரியாதை

 உளுந்தூர்பேட்டையில் அண்ணா சிலைக்கு எம்எல்ஏ மணிகண்ணன் மாலை அணிவித்து மரியாதை


*கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் திமுக முதுபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஒன்றிய நகர திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன்,  நகர செயலாளர் டேனியல் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பிரசன்னா ஜெயராமன்,  விஜயகுமார்,  செல்லையா, ராமலிங்கம், அண்ணாதுரை , குருமனோ, ரவி, ஆனந்தசேகர், சண்முகம், அய்யப்பன்,  ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

* கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் G.முருகன்