பள்ளிகளை மூட சொல்லும் வேசி ஊடகங்களை புறக்கணியுங்கள்.....

பள்ளிகளை மூட சொல்லும் வேசி ஊடகங்களை புறக்கணியுங்கள்......

பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை... ஆனால் பள்ளியை மூட வைப்பதற்கு மொத்த ஊடகமும் கங்கணம் கட்டி வேலை செய்கிறது.

மற்ற துறைகள் எல்லாம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜூலை மாதத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் எந்த துறையிலும் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கவில்லை.

தொழிற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் திறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது அங்கும் கொரோனா பாதித்தவர்கள் என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கவில்லை.

பள்ளி ஆரம்பித்து இரண்டாவது நாளே ஆசிரியருக்கு கொரோனா, மாணவருக்கு கொரோனா என்று செய்தி... எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை.

கடந்த 45 நாட்களாக பேருந்துகளும் ரயில்களும் மதுபான கடைகளும் பார்களும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. பேருந்து வாரியாக ரயில்நிலையம் வாரியாக

மதுக்கடைகளில் முண்டியடித்துக்கொண்டு சரக்கு வாங்கி அடிக்கும் குடிமகன்கள் யாரும் கொரோனாவில் பாதித்ததாக புள்ளி விவரங்கள் ஏதும் வெளியிடவில்லை  இதுபற்றிஎந்த புள்ளி விவரங்களையும் எந்த ஊடகமும், சமூக ஊடகமும் தெரிவிக்க வில்லை.

அனைத்து தொழில் நிறுவனங்களும் நன்றாக இயங்கிக் கொண்டுள்ளது அதிலும் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கவில்லை. திருவிழாக்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் அதில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பாதித்தவர்கள் பற்றிய எந்த புள்ளி விபரங்களையும் எந்த சமூக ஊடகங்களும் தெரிவிக்கவில்லை.....

எங்கு பார்த்தாலும் மக்கள் நெரிசல் வாகன நெரிசல் மக்கள் எல்லோருமே கொரோனாவை முற்றிலும் மறந்து விட்டார்கள். இதை எல்லாம் சுட்டிக்காட்டி நாம் கேள்வி கேட்டால் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில்தான் கூறுகிறோம் என்பார்கள்.

கொரோனா பாதிப்பை விட பள்ளிக்கூடம் சென்று கல்வியை இழப்பதால் இன்றைய குழந்தைகள் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க காத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தங்கள் குழந்தைகளின் படிப்பில் அக்கறை உள்ள அனைத்து பெற்றோர்களும் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப  தயாராக உள்ளனர்.

18 மாதமாக மிகப்பெரிய அளவில் கல்வியை இழந்து, வேறு வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள்... அதைப்பற்றிய புள்ளி விவரங்களை தெரிவிக்கலாமே.  பள்ளிக்கல்வி அமைச்சருடன் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்கிறார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏன் விளையாட்டு நேரம் அனுமதிக்கவில்லை என்று. மாணவர்கள் கடந்த 18 மாதங்களாக  விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் விளையாட்டுத் தான் வாழ்க்கை என்று வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இது கூட தெரியாத இங்கிதம் அற்றவராக அந்த செய்தியாளர் திகழ்கிறார்.

இப்படித்தான் பல செய்தியாளர்கள் இருக்கிறார்கள் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும் அறிவு கூட இல்லாமல் கையில் மைக்கோடு திரிகிறார்கள் . யாருக்குமே தனியாக சிந்திக்கின்ற அறிவும் கிடையாது தனியாக சென்று ஒரு நல்ல செய்தியை நாட்டிற்கு அளிக்கலாம் என்கிற துணிவும் கிடையாது எது நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி எதை அளிக்கலாம் எதை அளிக்கக் கூடாது என்கிற தெளிவும் கிடையாது ஒவ்வொருவரின் முதுகுக்குப் பின்னால் ...........பின்னால் சுற்றுவதுதான்வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சமூக ஊடகங்கள் என்ற பெயரில்  இயங்கும் ஒரு you tube channel ஐ நான் பார்த்தேன். அந்த வீடியோவில் உச்சநீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளை மூடச்சொல்லி மத்திய மாநில அரசுகளை கண்டித்திருக்கிறது என்று ஒரு பொய்யான செய்தி. அந்த you tube channel ஐ நடத்துபவர் பிரீபயர் விளையாட்டில் பள்ளி குழந்தைகளைஅடிமையாகிக்கொண்டிருக்கும் ஒரு சமூக விரோதி. இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.

கொரோனாவில் இருந்து கூட 7 நாட்களில் குழந்தைகள் மீண்டு வரமுடியும். ஆனால் இதுபோன்ற யூடியூப் சேனல்கள் பிடியில் சிக்கினால் மக்கள் மாணவர்கள் மிக கஷ்டம்.

 இவர்களுக்குத்தான் நிறையபேர் நிறைய கமெண்ட்ஸ் உம் நிறைய லைக்கும் கொடுக்கிறார்கள் அதனாலே அவர்கள் இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு கொண்டுள்ளன. இதற்கெல்லாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் இல்லை என்றால் இந்த சமூகம் மிகப்பெரிய சீரழிவை சந்திக்க வேண்டி வரும்.

உங்கள் குழந்தைகள் நேரடி வகுப்பின் மூலம் இழந்த கல்வியை மீட்டெடுப்பது என்பது வருடக்கணக்கில் கூட ஆகலாம். 

அதற்காக தமிழக அரசு முன்முயற்சி எடுத்து செயல்பட்டு கொண்டுள்ளது பெற்றோர்களும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் எப்போது பள்ளிகள் திறக்கும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி அழகு பார்க்கலாம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் ஊடகங்களும் சில சமூக ஊடகங்களும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு தவறான செய்திகளை பரப்புவதால் கல்வித்துறையில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த போலி பித்தலாட்ட ஊடகங்களில் இருந்து மக்களை பாதுகாப்பது மிகப்பெரிய தேவையாக இருக்கின்றது எனவே பெற்றோர்களே பொதுமக்களே

குழந்தைகளின் கல்வி அறிவை அழித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

இந்த வேசி ஊடகங்கள் குறிக்கோளே இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக ஊடகங்கள் யூடியூப் சேனல்களை புறக்கணியுங்கள் மக்களுக்கு நல்லது சொல்லும் நல்லவர்கள் நாட்டின் தேவை அறிந்தவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுங்கள்.

அன்புடன்.

 அறநெறி சிந்தனையாளர்

 கே. ஆர். ரவிச்சந்திரன். எம். ஏ.,

Writer - Editor- Publisher