தலைநகர் டெல்லியில், பெண் போலீஸ் அதிகாரி சபியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி மேலப்பாளையத்தில், கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

 தலைநகர் டெல்லியில், பெண் போலீஸ் அதிகாரி சபியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,  படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி மேலப்பாளையத்தில், கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!  

செப்.9:- பெண் போலீஸ் அதிகாரி சபியா என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், சமூக விரோதிகள் சிலரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில், படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை, இன்னமும் கைது செய்யாமல், மெத்தனப்போக்கை கடைபிடிக்கும், ஒன்றிய அரசை கண்டித்தும், அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், யாராக இருந்தாலும், எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி, குற்றவாளிகளை கண்டு பிடித்து, கைது செய்து, கடுமையான முறையில், "தண்டனை" பெற்றுத்தர வலியுறுத்தியும்,                   "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்" சார்பில், திருநெல்வேலியில் "கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட, " மேலப்பாளையம்" மண்டலத்தில், "சந்தை ரவுண்டானா" அருகில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், திருநெல்வேலி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன், தலைமை வகித்து, ஆர்ப்பாட்டத்தை துவக்கி, வைத்தார். கட்சியின், முன்னாள் மாவட்ட செயலாளர் காசீம் பிர்தவுசி, மாவட்ட செயலாளர் ஜாவீத் ஆகியோர், முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ சேவை யூசுப் சுல்தான், தொண்டர்  அணி செயலாளர் சம்சுதீன், ஊடக அணி செயலாளர் செய்யது அப்துல் காதர், இளைஞர் அணி செயலாளர் சித்தீக் உட்பட, திரளானோர் கலந்து கொண்டு, "கோஷம்" போட்டனர்.