பா.ஜ.க அரசைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம், வடக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க அரசைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம், வடக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்


செப்-20 

ராமநாதபுரம் மாவட்டம், வடக்கு திமுக சார்பில் வடக்கு நகர செயலாளர் கார்மேகம் தலைமையில், தமிழக முதல்வரின் அறிவதுத்தலின்படி மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து  இன்று காலை சரியாக 10 - மணி அளவில் பிஜேபி அரசை கண்டித்து அவரது இல்லத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதில் மறுக்காதே மறுக்காதே ரத்து செய்ய மறுக்காதே, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுக்காதே, அஞ்சாதே அஞ்சாதே விவசாயிகளை உயர்வு உயர்வு கேஸ் விலை உயர்வு,  என்கின்ற கண்டன கோஷங்களோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன் வார்டு செயலாளர்கள் பிற அணி அமைப்பாளர்கள் கிருஷ்ண வாண்டையார், காளிதாஸ், வசந்தகுமார், வீரசேகர்,பிரதீப், பழனிவேல், விக்னேஸ்வரன் உள்ளிட்ட, திமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு