போலி கல்வி சான்று கொடுத்து வேலையில் சேர்ந்த நான்கு ஊராட்சி செயலாளர்கள் பணி நீக்கம்

போலி கல்வி சான்று கொடுத்து வேலையில் சேர்ந்த நான்கு ஊராட்சி செயலாளர்கள் பணி நீக்கம்


வேலுார் : வேலுார் மாவட்டத்தில், போலி கல்வி சான்று கொடுத்து வேலையில் சேர்ந்த நான்கு ஊராட்சி செயலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டத்தில், கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் போலி கல்வி சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார் வந்தது. 

இதையடுத்து அவர்களது கல்வி சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டது. 

அதில், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மோர்த்தானா ஒன்றிய செயலாளர் விநாயகம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் பரவகல் ஊராட்சி செயலாளர் லோகநாதன், பாலுார் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ஏரந்தாங்கல் செயலாளர் ராஜா ஆகியோர் போலி கல்வி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த நான்கு ஊராட்சி செயலாளர்களை இன்று பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.