ஓசூர் மாநகராட்சி வளரவே இல்லை ; முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

ஓசூர் மாநகராட்சி வளரவே இல்லை ; முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


மாவட்டஐஎன்டியூசி ஆபிஸில்,முன்னாள் எம்எல்ஏவும்,ஐ என் டி யு சி  இன் தேசியசெயலாளருமான மனோகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,ஓசூர் மாநகராட்சி எல்லை விரிவாகத்திற்காக,கிருஷ்ணகிரி
கலெக்டர் ஆபிஸில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்த கூட்டம் ஓசூர்
மாநகராட்சி பகுதியில் நடத்தாமல்,கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபிஸில் நடத்துவது
எந்தவிதத்தில் நியாயமாகும்.கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதற்காகவே
அங்கு போடப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆபிஸ் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு,அனைத்து ஊராட்சி தலைவர்களும்
ஒப்புக்கொண்டனர் என சொல்வது நாடகமா?.ஒசூரானது 3-ம் நிலை நகராட்சியாக இருந்து பின் 2-ம் நிலைநகராட்சியாக மாறியது.இதையடுத்து சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில்
அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியை,மாநகராட்சியாக அறிவித்தார்.

ஓசூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 5ஆண்டுகளாகியும்,எந்தவித வளர்ச்சியும் பெறவில்லை.கிராம பஞ்சாயத்துகளில் கூட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.23 சதுர கிலோமீட்டர் தொலைவுள்ள ஓசூர் மாநகராட்சியில்,220 பேர் மட்டுமே சுகாதார பணியாளர்களாக
வேலை செய்கின்றனர்.கடந்த 1991-ல் பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து நான்
வெளிவந்த போது 220 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதே பணியாளர்கள் தான் இப்போதும் உள்ளனர்.போதிய பணியாளர்கள் மாநகராட்சியில்
நியமிக்காததால்,மக்களுக்கு கோரமான நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.பொதுவாக
நகராட்சி பகுதியில் மண்சாலை இருக்கக்கூடாது.ஆனால் ஓசூரில்
25சதவீதம் மண்சாலைகளே உள்ளது.ஓசூருக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும்
ராமநாயக்கன் ஏரி கடந்த 15 ஆண்டாக வறண்டு கிடக்கிறது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் செய்வதாக நாங்கள் அறிவித்ததின்பேரில், முன்னாள்
அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி,நகராட்சி தலைவராக இருந்தபோது ரூ.50 லட்சம்
செலவில்,பைப் லைன் போட்டு மாயாஜாலம் செய்து ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீரை
ராமநாயக்கன் ஏரிக்கு கொண்டு வந்தார்.ஆனால் 3 நாட்கள் மட்டும் தண்ணீர்
வந்தது.அதன்பிறகு பைப் உடைந்து விட்டது எனக்கூறி,தண்ணீரை
நிறுத்திவிட்டனர்.

இதை தொடர்ந்து உலகவங்கியில் கடன் பெற்று ரூ.34 கோடியில்
ராமநாயக்கன் ஏரியை அழகுபடுத்தும் திட்டத்தை துவங்கவுள்ளனர்.நிலத்தடி நீரே
ஏரியில் இல்லை.ஆனால் ஏரியை அழகு படுத்துகிறோம் என்று பணத்தை ஏன்? விரயம்
செய்கிறார்கள் என்ன பலன்? என்பது தெரியவில்லை.இவ்வாறு அவர்
கூறினார்.அப்போது முன்னாள் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சத்திய மூர்த்தி
உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.