வளர்ச்சி அடைந்த கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகள் ஆக தரம் உயர்த்த வேண்டும்

வளர்ச்சி அடைந்த கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகள் ஆக தரம் உயர்த்த வேண்டும்

தமிழ்நாடு அரசு வளர்ச்சியடைந்த பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், பெரியநகராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதேபோல் வட்டாட்சிர் அலுவலகத்தை தலைமையிடமாக கொண்ட ஊராட்சிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி தலைமையிடமாக கொண்ட ஊராட்சிகள், வளர்ச்சியடைந்த 5000 மக்கள் தொகைக்கு மேலாக உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் உயர்திரு நேரு அவர்களையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் உயர்திரு  சிவ்தாஸ் மீனா அவர்களையும், பேரூராட்சிகளின் ஆணையர் உயர்திரு செல்வராஜ் அவர்களையும் சந்தித்து தமிழ்நாடு பேரூராட்சிதுறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு கொடுத்து சந்தித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்க மாநில தலைவர் கணேசன் பொதுசெயலாளர் கேசவன், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் மு.செ. கணேசன், பொதுசெயலாளர் க. சந்திர சேகர், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பொதுசெயலாளர் கனகராஜ், துணைதலைவர் தங்கவேல், பணியாளர் சங்க மாநில தலைவர் எடவர்டு ஜெயசீலன் பேரூராட்சிதுறை பணியாளர்சங்க மாநில தலைவர் பிச்சமுத்து மற்றும் மோகன், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பேருராட்சிகளை தரம் உயர்த்தப்படுவதால் பதவி உயர்வு . வழியின்றி பலர் பாதிக்கபடுகின்றனர். ஒரே பணி நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பதவி உயர்வின்றி மன உளைச்சலோடு பணி ஒய்வு பெறுகின்றனர்.

சீப் ரிப்போட்டர் மா அருள்நேரு