அன்பிற்கினிய கேங்மேன் பணியாளர்களுக்கு அன்பான வேண்டுகோள்..
நீங்கள் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும்போது பாதுகாப்புடனும் கவனத்துடனும் பணியாற்றிட வேண்டும் என்பதே அனைத்து தொழிற்சங்கங்களின் தாழ்மையான வேண்டுகோளாகும்...
இன்று காலை கோவை தெற்கு வட்டம் கிணத்துக்கடவு கிழக்குப் பிரிவில் கேங்மேன் பணியாளராக பணிபுரியும் திரு.மணி அவர்கள் மின்மாற்றியில் பழுது பணி பார்க்கும்போது மின் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்..
மேற்கண்ட பிரிவு அலுவலகத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் மற்றும் கிணத்துக்கடவு உதவி செயற்பொறியாளர் அவர்களின் ஆலோசனைப் படி தற்போது கொங்குநாடு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திரு.மணி அவர்களை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சை வழங்குவது பற்றியும் மருத்துவரை கலந்து ஆலோசித்து உரிய சிகிச்சை வழங்கிட சம்மேளனத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர்.D. கந்தவேல் அவர்கள் அறிவுறுத்தினார்..
இதுபோன்ற விபத்துகள் இதுவே கடைசியாக இருக்கட்டும்..
வரும் காலங்களில் கேங்மேன் பணியாளர்கள் மிக கவனத்துடனும், பாதுகாப்புடனும் பணியாற்றுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் பணியிடத்தில் விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பின்மை ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக தாங்கள் சார்ந்த தொழிற்சங்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
இவன்.
ஆ.அரங்கநாதன்
மாநில துணைப் பொதுச் செயலாளர்தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் கோவை