தேசிய கவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவப் படங்களுக்கு, மலர்மாலைகள் அணிவித்து, புகழ் அஞ்சலி

 தேசிய கவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவப் படங்களுக்கு, மலர்மாலைகள் அணிவித்து, புகழ் அஞ்சலி


திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தேசிய கவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவப் படங்களுக்கு, மலர்மாலைகள் அணிவித்து, புகழ் அஞ்சலி!  

திருநெல்வேலி,செப்.11:- இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் "தேசிய கவி" சுப்பிரமணிய பாரதியின், நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், " தியாகி" இம்மானுவேல் சேகரனின், 64-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், மகாராஜா நகரில், அன்னாரின் திருவுருவப் படங்களுக்கு," மலர் மாலைகள்" அணிவித்து, " புகழ் அஞ்சலி" செலுத்திடும் நிகழ்ச்சி, இன்று (செப்டம்பர்.11) காலையில், நடைபெற்றது.ஜான் பாண்டியனின், "தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பில், அதன் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில், மகளிர் அணித்தலைவி ஷர்மிளா, பகுதிச்செயலாளர்கள், மேலப்பாளையம்        "டிக்" முத்து, தச்சநல்லூர் ராஜா மற்றும் நிர்வாகிகள் லட்சுமணன், ராஜா துரைப்பாண்டியன், மணிமாறன் ஆகியோர், கலந்து கொண்டனர்.         *"தமிழக அரசு" சார்பில், "தியாகி" இம்மானுவேல் சேகரனுக்கு, திருநெல்வேலியில், முழுவுருவ "வெண்கலச்சிலை" நிறுவ வேண்டும்!                *அதுபோல்,"தியாகி" இம்மானுவேலின், பிறந்த தினத்தையும், நினைவு தினத்தையும், "அரசு விழாக்கள்" ஆக, கொண்டாட வேண்டும்! - ஆகிய, இரண்டு தீர்மானங்கள், இந்த நிகழ்ச்சியின் போது, நிறைவேற்றப்பட்டன.