பள்ளிகளை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி.... நந்தகுமார் சிறப்பு பேட்டி....

 பள்ளிகளை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி.... நந்தகுமார் சிறப்பு பேட்டி....


 இன்று தலைமைச்செயலகத்தில் கொடுத்த பேட்டியில் வரும்  மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை திறக்க வேண்டும் என்பதுதான் எமது  சங்கத்தின் கோரிக்கை.

அரசு ஒரு மாதம் கழித்து நவம்பர் மாதம் பள்ளிகளை திறப்போம் என்பதை  ஏற்க முடியாது. அதற்குள்  முதற்கண் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையாவது பள்ளிகள் திறந்திட வேண்டும். ஓரிரு வாரங்கள் கழித்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு திறந்தால் கூட மாணவர்கள் வந்து போவதற்கு பெற்றோர்கள் வந்து போவதற்கு சிறப்பாக இருக்கும்.

நாம் அனைவரும் அரசின் விதிகளுக்குட்பட்டு பள்ளிகள் நடத்த ஏதுவாகும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறக்கலாம் என்று தான் நாம் சொல்லி இருக்கிறோம் ஊடகங்கள் அதை

திறித்தோ மாற்றியோ சொல்லி இருக்கிறார்கள் அதை நீங்கள் தவறாக எண்ணிக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பது சரியாக இருக்காது.

 எனவே எங்கள் நோக்கம் எல்லாம் நர்சரி பிரைமரி பள்ளிகளை திறக்க கூடாது என்பதல்ல 100% நர்சரி பிரைமரி பள்ளிகளுக்காக நாங்கள்  உழைத்துக் கொண்டிருக்கிற மூத்த சங்கம் முதல் சங்கம் .

தமிழகத்தில் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்காக உரத்த குரல் கொடுக்கிற ஒரு சங்கம் நமது சங்க மட்டும்தான். நர்சரி பிரைமரி பள்ளிகளை காப்பாற்ற வந்துள்ளோம் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றி கொண்டு இருக்கின்ற எந்த சங்கமும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை.

நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை கொடுத்து நல்ல வழிகாட்டி இப்பள்ளிகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களின் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிற ஒரே சங்கம் நமது சங்கம் மட்டும்தான்.

இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவது தொடங்கி ஆட்டையை கட்டணம் பெற்றுத் தரும் வரை அயராது பாடுபட்டு கொண்டிருப்பது நமது சங்கம் மட்டும்தான்

எனவே வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எல்லோருக்காகத் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதுவும் நர்சரி பிரைமரி பள்ளிகளின் பிரச்சனையை முன்வைத்து தான் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பதை விளக்கமாக உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 உண்மை வீடியோ ஆதாரத்தை உங்களுக்காக இங்கே வெளியிட்டு இருக்கிறேன். பார்த்து கேட்டு தெளிவடைய வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.

அன்புடன் K.R. நந்தகுமார் .