திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் ஐந்து பேருக்கு சிறப்பு விருதுகள் ; முக ஸ்டாலின் அறிவிப்பு...!

திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் ஐந்து பேருக்கு சிறப்பு விருதுகள் ; முக ஸ்டாலின் அறிவிப்பு...!

திமுக சார்பில் முப்பெரும் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதாவது அண்ணா பிறந்தநாள், பெரியாரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்டநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், செப்டம்பர் 16 திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும், செப்டம்பர் 17 மறைந்த தந்தை பெரியாரின் பிறந்த நாளையும் சேர்த்து முப்பெரும் விழா திமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், பொதுக் கூட்டத்தை நடத்துவதும் வழக்கம். அத்துடன் முப்பெரும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

➤பெரியார் விருது – மிசா.பி.மதிவாணன்
➤அண்ணா விருது – எல்.மூக்கையா
➤கலைஞர் விருது – கும்முடிபூண்டி கி.வேணு
➤பாவேந்தர் விருது – வாசுகி ரமணன்
➤பேராசிரியர் விருது – பா.மு.முபாரக்

ஆகியோர் விருதுகள் பெறுவதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.