திருநெல்வேலியில், மாற்றுத் திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி முகாம்

திருநெல்வேலியில், மாற்றுத் திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி முகாம்

திருநெல்வேலியில், மாற்றுத் திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி முகாம்! மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்! திருநெல்வேலி,செப்.3:- திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள, ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களிலும், இம்மாதம் 17- ஆம் தேதி வரையிலும், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒருநாள் என்னும் கணக்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு,  "கொரோனா" தடுப்பூசி போடும் பணிகள், நடைபெறுகின்றன. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முதன்முதலாக இந்தப்பணியை,  "மாவட்ட ஆட்சித்தலைவர்" வே.விஷ்ணு, துவக்கி வைத்தார்.

.அப்போது பேசிய அவர், "மாவட்ட மாற்றுத்திறனாளிகள், நல அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட, 12 ஆயிரத்து, 156 நபர்களுக்கு, இந்த தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்நாளில், 2 ஆயிரத்து, 722 பேர், தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.மீதியுள்ள, 9 ஆயிரத்து, 434 பேர் தங்களுடைய பகுதிகளில், குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறுகிற முகாம்களில், தடுப்பூசி போட்டுக் கொள்வர்!" என்று,தெரிவித்தார். அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், முடநீக்கியல் வல்லுநர் டாக்டர்.பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜஸ்டின் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர், உடனிருந்தனர்.