தமிழகத்தில் பள்ளிகளை மூடுவது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் - நீதிபதி கருத்து

 தமிழகத்தில் பள்ளிகளை மூடுவது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் - நீதிபதி கருத்து

தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதின் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டுமென மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,

கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பள்ளிகளிலில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பில் நீதிபதியின் முன் முறையீடு செய்யப்பட்டது.

பள்ளியில் நடைபெறும் நேரடி வகுப்புகளுக்கு வர வேண்டும் என மாணவர்களை கல்வித்துறை கட்டாயபடுத்தவில்லை. மேலும் பள்ளிக்கு வராத மாணவர்களை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறுகிறது என தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக உரிய தகவல்களுடன் புதிய பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்புகள் திறந்தாலும் , ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிய பொது நல வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடதக்கது.

தமிழகத்தில் இதற்கென்று சிலர் சுற்றிக் கொண்டுள்ளனர். பள்ளிகளை இழுத்து மூடுவதில் அவர்களுக்கு அப்படி என்ன ஆனந்தமோ தெரியவில்லை. சில ஊடகங்களும் பெரும்பாலான யூட்யூப் பர்களும் டுபாக்கூர் செய்திகளை பரப்புவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். சில நீதிபதிகளும் இவர்களுக்கு ஏற்றார்போல் தீர்ப்பு சொல்வதும் கருத்து சொல்வதும் வேதனை தருகின்ற விஷயம். அது என்ன சமூக அக்கறையோ தெரியவில்லை இல்லை இவர்களுக்கு சமூக சூழ்நிலை தெரியவில்லை என்று சொல்வதா...? நாளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை வீணாக்கும் இவர்களுக்கு யார் தான் பாடம் நடத்துவதோ....!