தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலையில் முன்னுரிமை: அரசாணை வெளியிட்டு அதிரடி காட்டிய தமிழக அரசு!*

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலையில் முன்னுரிமை: அரசாணை வெளியிட்டு அதிரடி காட்டிய தமிழக அரசு!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலையில் முன்னுரிமை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது.

 கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழ் வழியில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீட்டில் நியமனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

 வேறு மொழிகளில் படித்து தேர்வு மற்றும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. பட்டயப்படிப்பு ,பள்ளிப் படிப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என அனைத்தும் முழுவதுமாக தமிழ் படித்திருக்க வேண்டும். தமிழில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே இட ஒதுக்கீட்டில் நியமனம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.