பாரத பிரதமரின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்

பாரத பிரதமரின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்


ராமநாதபுரம் செப்-24

ராமநாதபுரம் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பிலும், ,ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள லெட்சுமி மருத்துவமனை, மருத்துவர். மனோஜ்குமார் அவர்கள்,  இணைந்து  மாபெரும் இரத்த தான முகாம் மேதகு பாரத பிரதமரின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு   இன்று காலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் முரளிதரன் அவர்கள் தலைமையில், இன்று நடைபெற்றது.இதில் மருத்துவர்.கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர். ஜவஹர்லால் மற்றும் மருத்துவர். மலை அரசு, உள்ளிட்ட  அனைத்து பாரதிய ஜனதா கட்சியினர், இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இரத்தக் கொடையாளர்களுக்கு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் திருமதி.அல்லி அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மலையரசு, மருத்துவர் ஜவஹர்லால், BJP மாவட்டத் தலைவர் முரளிதரன், ஆகியோர் இரத்ததானம் செய்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு