பரமக்குடியில் இமானுவேல் சேகரனாரின் 64 ம் ஆண்டு குருபூஜை
ராமநாதபுரம் செப்-11
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அருகிலுள்ள பரமக்குடியில் இமானுவேல் சேகரனாரின் 64 ம் ஆண்டு குருபூஜை இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு. ராஜ கண்ணப்பன் அவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்கள், மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி அவர்கள், மற்றும் திமுக தோழமை கட்சியினர் வருகை தந்து இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.Nஅன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு