36- ஆவது தேசிய கண்தான, இருவார நிறைவு, பரிசளிப்பு விழா!

36- ஆவது தேசிய கண்தான, இருவார நிறைவு, பரிசளிப்பு விழா!

  திருநெல்வேலி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனையில்,     36- ஆவது தேசிய கண்தான, இருவார நிறைவு, பரிசளிப்பு விழா!  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பங்கேற்பு! திருநெல்வேலி,செப்.9:- "பிரதமர்" மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்தபோது, 2011- ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8- ஆம் தேதி, மன்மோகன்சிங்கும், அவருடைய துணைவியார் குர்கரண் சிங் கவுரும், தங்களுடைய கண்களை "தானம்" செய்தற்கான, "உறுதிமொழி" பத்திரத்தில், கையெழுத்திட்டனர். அதன் நினைவாக, இந்தியாவில், ஆண்டு தோறும், 2011- ஆம் ஆண்டில் இருந்து, ஆகஸ்ட் 25- ஆம் தேதி முதல், செப்டம்பர் 8- ஆம் தேதி முடிய, இரண்டு வார காலத்துக்கு, "தேசிய கண்தான இருவாரவிழா", கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி, வண்ணார் பேட்டை பகுதியில் உள்ள, "டாக்டர் அகர்வால்" கண் மருத்துவமனையில், "தேசிய கண்தான இருவார விழா", நடைபெற்றது. ஒவ்வொரு நாளும், பல்வேறு தரப்பினருக்கும், "கண்தானம்" தொடர்பான, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிறைவு நாளில், " பரிசளிப்பு விழா" நடைபெற்றது. திருநெல்வேலி "மனோன்மணியம்" சுந்தரனார் பல்கலைக்கழக "துணைவேந்தர்" டாக்டர்.கா.பிச்சுமணி,  "சிறப்பு அழைப்பாளர்" ஆக பங்கேற்று,  கண்தான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட, பல்வேறு போட்டிகளில், " வெற்றி" பெற்ற, பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கும், கடந்த ஆண்டு (2020)  "கண்தானம்" செய்த, மூன்று பேரின் குடும்பங்களுக்கும், "கேடயங்கள்" மற்றும்          "பரிசுகள்" ஆகியவற்றை வழங்கி,பாராட்டினார். நிகழ்ச்சியில்,       மருத்துவமனை இயக்குநர் டாக்டர் லயனல் ராஜ், "மாடத்தட்டுவிளை" தேவாலய "பங்குத்தந்தை" ஜெயக்குமார், திரிடூஒன்டூ (3212) ரோட்டரி மாவட்டத்தின், உறுப்புதானப்பிரிவு இயக்குநர் பி.கே.சரவணன், அரிமா சங்கத்தலைவர் டாக்டர் கணேசன் உட்பட பலர், கலந்து கொண்டனர்.