திருநெல்வேலி மாவட்டத்தில், 10 பேருக்கு, நல்லாசிரியர் விருது! மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வழங்கி, கவுரவித்தார்!

 திருநெல்வேலி மாவட்டத்தில்,  10 பேருக்கு, நல்லாசிரியர் விருது! மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வழங்கி, கவுரவித்தார்!

 திருநெல்வேலி,செப்.6:- இந்திய திருநாட்டின்,  "முதலாவது" துணை ஜனாதிபதியும், "இரண்டாவது" ஜனாதிபதியுமான, டாக்டர்.ராதா கிருஷ்ணனின், பிறந்த நாளான, செப்டம்பர் 5-ஆம் தேதி, ஆண்டுதோறும்  "ஆசிரியர் தினம்" ஆக, கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளையொட்டி,  மத்திய- மாநில அரசுகள், ஒவ்வொரு ஆண்டும், சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு   "நல்லாசிரியர்" விருதுகளை, வழங்கி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, இந்த "நல்லாசிரியர்" விருதானது, 1997- ஆம் ஆண்டு முதல்," டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது" என்னும் பெயரில், வழங்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு(2021), மாநிலம் முழுவதிலுமாக, மொத்தம் 389 ஆசிரியர்கள்,  விருதுக்காக, "தேர்வு" செய்யப்பட்டு, "கொரோனா" பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, அவரவர் மாவட்டங்களிலேயே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, இந்த "விருதுகள்" வழங்கப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், 5 பெண்கள்- 5 ஆண்கள் என, மொத்தம் 10 ஆசிரியர்களுக்கு, "டாக்டர் ராதா கிருஷ்ணன்              விருது" களை, "மாவட்ட ஆட்சித்தலைவர்" வே.விஷ்ணு வழங்கி, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். "விருது" பெற்ற ஆசிரியர்கள், தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், தங்களுடைய "நன்றி"களை, தெரிவித்து கொண்டனர். இந்த விருதில், வெள்ளிப்பதக்கம், ஐயாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியன அடங்கும்.