தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் திரு. ஜி. பி.எஸ். நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்

தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் திரு. ஜி. பி.எஸ். நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு


 ராமநாதபுரம் ஆகஸ்ட் - 28 

தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் திரு. ஜி. பி.எஸ். நாகேந்திரன் அவர்கள், ராமநாதபுரத்தில் நிருபர்களை சந்தித்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் பிஜேபி அலுவலகத்தில் இன்று பிஜேபியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜிபிஎஸ். நாகேந்திரன் நிருபர்களை சந்தித்து கூறும்போது, இன்று நான் தலைமையின் ஆணைக்கிணங்க சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்று ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்கள் திறக்கவும் அந்த தீர்த்தங்களை நம்பி வாழும் 450 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை நிலைநாட்டவும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று பார்வையிட்டு வந்தேன்22 தீர்த்தங்கள் கோவிலில் மூடப் பட்டிருப்பதால் அதை நம்பி உள்ள யாத்திரை பணியாளர்களின் குடும்பம் 3000 பேர் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள் அதனடிப்படையில் தமிழக அரசு அந்த 22 தீர்த்தங்களையும் திறந்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று நான் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்திருச்செந்தூரில் நாழிக்கிணறு திறக்கப்பட்டு விட்டது அதனடிப்படையில் 22 தீர்த்தங்களை ராமேஸ்வரத்தில் திறக்க வேண்டும் என்று மாநில பிஜேபி செயற்குழு உறுப்பினர் ஜிபிஎஸ் நாகேந்திரன் தமிழக அரசை  வலியுறுத்தினார். உடன் நகர்தலைவர் வீரபாகு, மாவட்ட பொதுச்செயலாளர் சந்தர முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், போகலூர் ஒன்றிய கவுன்சிலர் இஎம்டி கதிரவன், மாவட்ட துணைத்தலைவர் நாகேந்திரன், மாவட்ட ஊடக பிரிவு S.P.குமரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு