அச்சுந்தன்வயல் கிராமத்தில்கிருஷ்ண ஜெயந்தி விழா
ராமநாதபுரம் ஆகஸ்ட் - 30
அருள்மிகு கிருஷ்ண ஜெயந்தி விழாராமநாதபுரம் மாவட்டம், அச்சுந்தன்வயல் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு பாமா ருக்மணி சமேத அருள்மிகு கண்ணபிரான் ஆலய 35-ம் ஆண்டு அருள்மிகு கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.திங்கட்கிழமை (30.08.2021) அன்று நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்த ஆயர்குல நாயகன் அருள்மிகு கண்ணபிரானின் பிறந்தநாள் விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக (29.08.2021) அன்று பெரியவர்கள் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் திருவிளக்கு பூஜை உடன் விழா துவங்கியது இதனையடுத்து (30 .8.2021) பால்குடம் எடுத்தல் கிராமத்து பொங்கல், சிறப்பு பூஜைகள் சமுதாய கொடியேற்றுதல், விளையாட்டு போட்டிகள், வழுக்குமரம் ஏறுதல், போன்றவை நடைபெற்றன. இதற்கான ஏற்பாட்டினை யாதவர் சங்கம் அருள்மிகு கோகுலகிருஷ்ணன் இளைஞர் நற்பணி மன்றம் யாதவர், மகளிர் மன்றம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். காவல்துறையினரின் பாதுகாப்போடு கொரோனா விதிகளுக்கு உட்பட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக யாதவர் சங்க சமுதாய கொடியை தலைவர் திரு.செட்டியப்பன் செயலாளர், திரு.குமரவேலு பொருளாளர் திரு.பாலகிருஷ்ணன் ஆகிய மூன்றுபேரும் கொடியை ஏற்றி வைத்தனர். இதனையடுத்து அருள்மிகு கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனை கண்ணன் கோயில் அர்ச்சகர் V.விஜயராகவன் அய்யங்கார் மிக சிறப்பாக செய்திருந்தார். நாளை (31.08.2021) அன்று உறியடி உற்சவ விழா நடைபெருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு