ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை வேண்டுமென்றே குறைத்த பள்ளிக்கல்வித்துறை
தனியார் பள்ளிகளில் சேர, ஆர்டிஇ (RIGHT TO EDUCATION) சட்டத்தின் கீழ், 82 ஆயிரத்து 766 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்*
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் சேர்வதற்கான கால அவகாசம் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 07 ஆயிரத்து 984 இடங்களுக்கு, ஆர்டிஇ (RIGHT TO EDUCATION) சட்டத்தின்கீழ் 82 ஆயிரத்து 766 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
*குலுக்கல் முறையில் தேர்வு*
இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும்; மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பள்ளியில் உள்ள இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், குலுக்கல் முறையில் வரும் 19ஆம் தேதி மாணவர் தேர்வு செய்யப்படுவர்.
மொத்த இடங்களைவிட குறைவாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளிலும்; அதே நாளன்று மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இதற்கு முன்னதாக தகுதி வாய்ந்த மாணவர்கள், தகுதி இல்லாத மாணவர்களின் விவரங்கள் 18ஆம் தேதியே வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 2 லட்சத்து 13 ஆயிரத்து 368 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 602 விண்ணப்பங்கள் குறைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு RTE மாணவர் சேர்க்கையில் 60 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது இதற்கு காரணம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ள அதிகார துஷ்பிரயோகம் தான். கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கையை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி பல பள்ளிகளில் Intake Capacity குறைத்து விட்டார்கள் இதனாலே பல பள்ளிகளில் சேருவதற்கு நிறைய மாணவர்கள் தயாராக இருந்தும் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் நிறைய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேருகிறார்கள் என்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. இதை ஈடுகட்ட இலவச கட்டாய கல்வி சட்டத்தை குழி தோண்டிப் புதைக்கின்ற வேலையை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. இது ஏழை எளிய மாணவர்களுக்கு இழைக்கின்ற மிகப்பெரிய அநீதியாகும்.
மாணவர்கள் சேர்க்கை குறைந்ததற்கு காரணம் பள்ளிகள் திறக்கப்படாததும் எப்போது திறக்கப்படும் என்ற உறுதியான நிலை இல்லாததும் தான்.
வரும் காலங்களிலும் இதே நிலை நீடித்தால் RTE சேர்க்கை என்பது பூஜ்ஜியம் என்கிற அளவில் சென்று முடிந்தாலும் முடிந்துவிடும்.
பள்ளிக்கல்வித்துறை இந்த விஷயத்தில் வேண்டுமென்றே அரசியல் செய்கிறது அரசுப்பள்ளி தனியார் பள்ளி என்று மாற்றாந்தாய் மனப் போக்கோடு செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களிலே இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களை கூட யாருடைய அனுமதியும் இல்லாமல் அரசு பள்ளிகளில் சேர்த்து அவர்களின் தரமான கல்வி உரிமையை தடுப்பதோடு மட்டுமல்லாமல் வருகின்ற காலங்களிலும் இதில் யாரும் சேரக்கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயம்.
பள்ளிக் கல்வித்துறை செய்து வருகின்ற இந்த தேச விரோத மக்கள் விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும் மத்திய மாநில அரசுகள் இந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். RTE சட்டத்தை மதிக்க கற்றுத் தர வேண்டும்.
.அடுத்த ஆண்டாவது முறையாக நடைபெற வழி காண வேண்டும் என்று பொதுமக்களும் பெற்றோர்களும் வேண்டுகின்றனர்.